Webster Street – Tamil

நாங்கள் Webster தெருவிலுள்ள புகையிரதக் கடவையினை மூடிவிட்டு, புகையிரத பாதையின் கீழ் புதிய நிலக் கீழ் வீதியினை நிர்மாணித்து , Princes நெடுஞ்சாலை - Lonsdale தெருவை Cheltenham மற்றும் Hammond வீதிகளை இணைக்கிறோம்.

புதிய நிலக் கீழ் வீதியின் இறுதி வடிவமைப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இது Dandenong இன் CBDஇலிருந்து போக்குவரத்தை மாற்றுப்பாதையூடாக மாற்றியமைக்கும் மற்றும் Webster தெருவில் இருந்து வரும் கனரக வாகனங்களை நிறுத்தும். உங்களது பின்னூட்டம் இந்த வடிவமைப்புகளை வடிவமைக்க உதவியது.

புகையிரத பாதைக்கு கீழே உள்ள புதிய நிலக் கீழ் வீதி நெரிசலைக் குறைக்கும், மேலும் நம்பகமான வீதி வலையமைப்பை வழங்கும் மற்றும் Dandenongஐ எதிர்கால வளர்ச்சிக்கு தயார்படுத்தும்.

புகையிரதக் கடவை மூடப்பட்டவுடன், Webster தெரு உள்ளூர் குடியிருப்பாளர்களுக்கு அமைதியாக இருக்கும்.

முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன, மற்றும் 2025ல் கட்டுமானம் தொடங்கும்.

2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் Webster தெருவிலிருக்கும் புகையிரதக் கடவை வாகனங்களுக்காக மூடப்படும், மேலும் புதிய நிலக் கீழ் வீதி 2026 இல் திட்டமிடப்பட்டதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக திறக்கப்படும்.

புகையிரதக் கடவையினை அகற்றுவதன் மூலம், காலை உச்ச நேரத்தில் 60 நிமிடங்களுக்கு மேல் புகையிரதக் கடவைத் தடை வாயில்கள் பூட்டியிருக்கும் நேரத்தை நீக்கி, ஒவ்வொரு வாரமும் 10,000 ஓட்டுனர்கள் தங்களது பயண நேரத்தினை சேமிக்க உதவும்.


Sign up for updates

Stay updated about Victoria’s Big Build with the key announcements and milestones.

Subscribe